சிவகங்கை அருகே ஒக்கூரில் விபத்து! இருசக்கர வாகனத்தில் சாகசம் காட்டியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி!

 

  -MMH

   சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க, மானாமதுரையைச் சேர்ந்த அஜித் பாரதி, முருகானந்தம், ராஜேஸ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வழிநெடுக சாசகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

மூவரும் ஒக்கூர் அருகே வந்த போது திருச்சியிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் அஜித் பாரதி (18) மற்றும் முருகானந்தம் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்த மதகுபட்டி காவல்துறையினர், விபத்தில் பலியான இருவரது உடலையும் கைப்பற்றி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த ராஜேஸ் என்பவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதகுபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments