அ.தி.மு.க பொன்விழா ஆண்டை முன்னிட்டு கோவை வடவள்ளி பஸ் நிலையத்தில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

    -MMH

கோவை புறநகர் மாவட்டம் சார்பில் வடவள்ளி கூத்தாண்டவர் கோவில் வீதியில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வின் 50வது ஆண்டு பொன் விழா சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரகேகர் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து 38-A வார்டில் நடைபெற்ற விழாவில் அப்பகுதி அவைத்தலைவர் மாணிக்கவாசகம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள்  வழங்கினார்.

வடவள்ளி 38-A வார்டு பகுதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவப் படத்துக்கு சந்திரகேகர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி கட்சி கொடியேற்றினர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் 500 நபர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார். மேலும் இந்த விழாவில் கருப்புசாமி,38 வது வார்டு செயலாளர் பாலகிருஷ்ணன், குழந்தைவேலு, மயில்சாமி, பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments