கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி பொதுக்குழு கூட்டம்!!

  -MMH

    கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி பொதுக்குழு கூட்டம் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்கல்லூரியில் நடைபெற்றது.

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வராC. சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் K.தசரதன் முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர் J.s கிஷோர்குமார் தாமு வெங்கடாச்சலம் சிறப்புரையாற்றினார்.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் நானூறு பேர் நகர் ஒன்றிய பொறுப்பாளர்களாக அறிவித்தார்.

பொதுக்குழு தீர்மானங்களாக முகலாயர்கள் ஆட்சிக்காலத்தை விட தி.மு.க அரசின் ஆட்சி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது.முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் புரட்டாசி அமாவாசை தினத்தன்று கூட கோவில்களை பூட்டியதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

கோவையில் மாநகராட்சி இடத்தை பலர் ஆக்ரமித்து உள்ளனர்.உதாரணமாக செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் மாநகராட்சி இடத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.வாடகைக்கு கடைகளை விட்டுள்ளனர்.இதை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொது குழு கேட்டுக் கொள்கிறது.

கூட்டத்தில் கோட்ட செயலாளர் S.சதிஷ் கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால்  மாவட்ட செயலாளர்கள் G.ரமேஷ் K.மகேஷ்வரன் K.ஆறுச்சாமி மாவட்ட துணை தலைவர்கள்M.r முரளி M.லீலாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments