+2 மாணவி தற்கொலை! - கோவை மாநகர காவல் துறையினர் செய்தி வெளியீடு!!

    -MMH 

   கோவை உக்கடம் பி 4 காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கி  வரும் தனியார் பள்ளியில் படித்த +2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதின்  அடிப்படையில்  இறந்தபோன  மாணவியின் தற்கொலைக்கு காரணமாக அந்த (சின்மயா) பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின்  பாலியல் தொல்லையும் அதனால் ஏற்பட்ட மனஉழைச்சலுமே காரணம் என தெரிய வந்ததால் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை (31) த/பெ காளிமுத்து என்பரை 12-11-2021 ம்தேதி கைது செய்யப்பட்டு உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மாணவி பயின்ற தனியார் பள்ளியின் முதல்வர் மீராஜாக்சன் என்பவர் எதிரி மிதுன் சக்ரவர்த்தியின் பாலியல்  தொல்லை மாணவிக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்தும் பள்ளியின் முதல்வர் என்ற அடிப்படையில் சட்டப்படி காவல் துறையில் புகார் அளிக்க தவறியதால் இவரையும் குற்றவாளியாக கருதி போக்சோ சட்டத்தில் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவதற்காக நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப்படுகிறார்.

தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவி எத்தகைய சூழ்நிலையில் இறந்தார் என்பதையும் மிதுன் சக்ரவர்த்தியை தவிர வேறு யாரேனும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார்களா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்படுகிறது.

அவர் இறந்து போனதற்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments