வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி: தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு!!

   -MMH 

  தமிழ்நாடு பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மாயமான 3 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. குடியாத்தம் செம்பள்ளி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்ததால் தவித்து வரும் 230 பேரை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. ஒரு குழுவிற்கு தலா 20 பேர் வீதம் 40 பேர் தற்போது வேலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

-வேல்முருகன் சென்னை.


Comments