அரளிக்கோட்டை அருகே சாலை தடுப்பைத் தாண்டி பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து! 9 பெண்கள் காயம்!

 

-MMH

     இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வளநாடு கிராமத்தில் வசிப்பவர் ராக்கு. இவர் தனது மகள் மாதவக்கன்னியின் நீராட்டு விழாவை தனது சொந்த ஊரான திருப்பத்தூர் அருகே உள்ள திருவுடையார்பட்டியில் நடத்த எண்ணி, தனது உறவினர் பெண்கள் கலா, வீரஜோதி, தெய்வஜோதி உள்ளிட்ட 13 பேர் ஒரு வாடகை வாகனத்தில் வந்துள்ளனர். வாகனத்தை பரமக்குடியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வாகனம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் அரளிக்கோட்டை அருகே  வளைவான கண்மாய் பகுதியில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி வலதுபுறமாகச் சென்று சாலைத்தடுப்பைத் தாண்டி கண்மாய்க்குள் கவிழ்ந்தது.

இதில் 9 பேர் காயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு  அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அம்மச்சிபட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அவர்களை மீட்பதற்காக வாகனத்தின் கண்ணாடியை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டார். மேலும் அவ்வழியாகச் சென்றவர்களும், விபத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments