விவாகரத்து பெற்று அல்லது பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்களும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!!

 

 -MMH

   தமிழக அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெற்றோரை பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெண் களை குடும்பமாக அதிகரித்து,இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்படாத சலுகையை பெற தமிழக அரசு முடிவு செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழகத்தில் விவாகரத்து பெற்று அல்லது பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்கள் ஒருவரை தனிக் குடும்பமாக அங்கீகரித்து அவர்களும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

அதன் மூலம் குடும்ப அட்டை பெறுவதற்கு தனியாக வாழ்ந்து வரும் பெண்கள் தனி குடும்பம் என்ற தகுதியைப் பெறுகிறார்கள்.முதல்வர் ஸ்டாலின் இல் இந்த அறிவிப்பு அகில இந்திய அளவில் தமிழ்நாடு எவ்வளவு முற்போக்கு சிந்தனை கொண்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அறிவிக்கும் திட்டங்களில் சில இந்திய அளவில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அவ்வகையில் கேரளாவின் அரசியல் விமர்சகரும் பிரபல செய்தி நிறுவனத்தின் நிறுவனருமான சுஜித் நாயர் தனது முகநூல் பதிவில், கணவர் மற்றும் பெற்றோரை பிரிந்து வாழும் ஒற்றை பெண்களை குடும்பமாக அங்கீகரித்து, அவர்களை இதுவரை பெறாத பலன்களை பெறுவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. இது ஒரு முற்போக்கான ஆட்சி. நல்ல செயல் ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

மேலும் திருமணமான பெண் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க சட்டபூர்வமாக விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விதிகளில்,விண்ணப்பிக்கும் பெண்ணின் வீட்டில் சமையலறை இருக்க வேண்டும். தனியாக இருப்பதற்கான சுய அறிவிப்பு அவரால் எழுதப்படவேண்டும். வருவாய் ஆய்வாளர் மூலம் வீடு தணிக்கை செய்யப்படும் என்றும் ஆதார் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

-சுரேந்தர்.


Comments