நீட் தேர்வில் பழங்குடியின மாணவன் வெற்றி !

-MMH

       ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த, பழங்குடியின மாணவன் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி அடுத்த ஆத்துப்பொள்ளாச்சியில் வசிக்கும் பழகுடியின முதுவர் இனத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரது மகன் ராதாகிருஷ்ணன், 18. இவரது, இரண்டு வயதில் தந்தை விட்டுச்சென்றுள்ளார். இவரது தாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிசெய்து வருகிறார். தாயும் மகனும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 'நீட்' தேர்வு எழுதிய ராதாகிருஷ்ணன், தேர்வில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வில், 16 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில், இரண்டாவது முறையாக பங்கேற்ற ராதாகிருஷ்ணன் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு, கடந்த வாரம் வெளியான தேர்வு முடிவில், 406 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''வறுமையில் இருந்து, பிளஸ் 2 வரையில் படித்த நான், எட்டு விடுதிகளில் தங்கி பலரது உதவியுடன் கல்வி பயின்றேன். மருத்துவராக வேண்டுமென்ற லட்சியத்தில், 'நீட்' தேர்வு எழுதினேன். அரசு உதவி பெறும் பள்ளியில் தாய் மொழி தமிழ் வழியில் பயின்று, சில தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு 'நீட்' நுழைவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எனது கனவு உண்மையாகும் என்று நம்புகிறேன்,'' என்றார்

-அன்சாரி  நெல்லை செய்தியாளர்.

Comments