சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக வளாக சஞ்சீவி விநாயகருக்கு கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு!!

       -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சஞ்சீவி விநாயகர் கோவிலில் நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சஞ்சீவி விநாயகருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனக் காப்புடன் காட்சியளித்த சஞ்சீவி விநாயகருக்கு மகா தீப ஆரத்தி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இலட்சுமணராஜா, பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் செல்லையா, ஒன்றிய பொறியாளர் சிவக்குமார், மேலாளர் அருள்பிரகாசம், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், காசாளர் ஜீவா, பணி மேற்பார்வையாளர்கள் மஞ்சுபாரதி, சுப்பிரமணியன், ஜெகன் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments