வேட்டி சேலை போர்வை வழங்கிய மாவட்ட எஸ்பி!!

 -MMH

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ. கா. ப. அவர்கள் காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாடிவயல் மற்றும் கிராமப் பகுதியில் உள்ள சுமார் 20 மலைவாழ் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகை விழாவையொட்டி இனிப்புகள், சேலை, வேட்டி, மற்றும் போர்வை ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார். 

இவ்விழாவை தொடர்ந்து சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வைத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறி பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments