வால்பாறை பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம்! ரேஷன் கடைகளை உடைத்து அடாவடி! !

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் பல எஸ்டேட்டுகள் உள்ளன. அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அந்தந்த எஸ்டேட் நிர்வாகம் குடியிருப்புகளை கொடுத்து உள்ளது.

இந்த சூழ்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் ஞாயிறு அன்று இரவு 12 மணி அளவில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது.

அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு ரேஷன் கடையை உடைத்து அங்கு மக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் இதர பொருட்களை எடுத்து நாசம் செய்தன. இதில் பத்து மூட்டை ரேஷன் அரிசி சேதம் அடைந்தது இதனால் ரேஷன் அரிசியை மக்களுக்கு விநியோகிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

இவ்வாறு ரேஷன்  அரிசி வாசனையை முகர்ந்து வரும் காட்டு யானைகள் கூட்டம் ரேஷன் கடையை சேதப்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீடுகளையும் சேதப்படுத்தி சென்றுவிடுகின்றன இதனால் மக்கள் மிகுந்த பீதி அடைந்து உள்ளனர்,

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன், செந்தில்குமார் (முடீஸ்).

Comments