பாதுகாப்பு பணிக்கு சென்ற காவல்துறை அதிகாரியின் வாகனம் கவிழ்ந்து விபத்து! லாரி ஓட்டுநர் கைது! !

 

  -MMH

   கோவை டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணி முடிந்து போலீஸ் ஜீப்பில் நேற்று கோவை புறப்பட்டார். காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, கோட்டப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது மதுரை - மணப்பாறைக்கு டைல்ஸ் கற்கள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி திடீரென திரும்பி உரசியதில் ஜீப் கவிழ்ந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், டிரைவர் கோவிந்தன் காயமுற்றனர். மேலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் புறப்பட்டனர். லாரி டிரைவர் மணப்பாறை குருசாமியை (வயது40,) கொட்டாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

- S.ராஜேந்திரன்.

Comments