செல்போனில் விளையாடிய சிறுவனை தாய் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை! காவல்துறையினர் விசாரணை!!

-MMH

     கோவை ஈச்சனாரி மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுடைய மகன் திருவெங்கடேஷ் (வயது13). இவன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளான். செந்தில் இறந்து விட்டதால் தாயும், மகனும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் திருவெங்கடேஷ் விளையாடுவதற்கு ரேணுகாதேவியிடம் வாலிபால் கேட்டுள்ளார். அதை அவர் வாங்கித் தர வில்லை என்று தெரிகிறது. 

இதையடுத்து திருவெங்கடேஷ் அடிக்கடி செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதை ரேணுகாதேவி கண்டித்து உள்ளார். இதனால் சிறுவன், வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் விரைந்து வந்து திருவெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments