இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஸ்மார்ட் சிட்டி புகைப்பட கண்காட்சி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்ப்பு!!

   -MMH 

  திருநெல்வேலி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்திய ஸ்மார்ட் சிட்டி புகைப்பட கண்காட்சி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்ப்பு!!

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் திருநெல்வேலி மாநகராட்சி முழுவதும் தோண்டப்பட்ட சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்ககோரி மாநகராட்சி நிர்வாகத்தை வழியுருத்தி நெல்லை டவுண் வாகையடி முக்கில் புகைப்பட கண்காட்சி மூலம் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டவுண் ஜமால் தலைமையில் நகர தமுமுக மமக தலைவர் கோல்டன் காஜா, மமக துணை மாவட்ட செயலாளர் கம்புக்கடை ரசூல், மமக இளைஞர்அணி மாவட்ட செயலாளர் நெல்லை ஜாமியா சித்திக் மற்றும் 52 வது வார்டு மருத்துவர்அணி செயலாளர் முகம்மது ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டவுண் ஐமால் மற்றும் நெல்லை ஜாமியா சித்திக் கண்டன உரை நிகழ்த்தினர்.

-ருசிமைதீன், தஞ்சாவூர்.

Comments