பாண்டாங்குடி அருகே கோர விபத்து! சிங்கம்புணரியைச் சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

 -MMH 

                    சிங்கம்புணரி காவல் நிலையம் எதிரே வசித்து வருபவர்கள் பழனி கந்தசாமி - தேவகுமாரி தம்பதியினர். பழனி கந்தசாமி, தூத்துக்குடியில் வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தேவகுமாரி வேட்டையன்பட்டி அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது மூத்த மகன் ராஜகணபதி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை ராஜகணபதி தங்களுக்குச் சொந்தமான காரில் கொட்டாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். பாண்டாங்குடி பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது, ராஜகணபதி ஒரு பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார். அப்போது எதிரே வந்த ஒரு லாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் ராஜகணபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments