சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் கூடுதல் கட்டிடத் திறப்பு விழா!

-MMH
              சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடனும் செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

அந்தக் கல்லூரியில் கூடுதலாக இரண்டாம் தளம் கட்டப்பட்டு, சமீபத்தில் நிறைவுபெற்றது அந்தப் புதிய தளத்திற்கான திறப்பு விழா சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் எப்.எஸ்.ஐ அருட் சகாேதரிகளின் தலைமை அன்னை கல்வெட்டினை திறந்து வைத்தார்கள். உடன் திருச்சி மாநிலத் தலைவியும், முன்னாள் தலைமை சகாேதரியும், அருட்சகோதரிகளும் பங்கு பெற்றனர். சிவகங்கை முன்னை மேதகு ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள் கூடுதல் புதிய கட்டிடத்தை புனிதப்படுத்தி திருப்பலியைத் தலைமையேற்று நடத்தினார்.

சென்னை இலயோலா கல்லூரியிலிருந்து வருகை புரிந்த அருட் தந்தை ஜோ அருளும், சிங்கம்புணரி பங்குத்தந்தை பால்ராஜும், சாரல் கலைத் தொடர்பு இயக்குநர் தந்தை அந்தாேணி சாமியும் பங்கு பெற்றனர். திறப்பு விழாவிற்குப் பின் அழகிய வரவேற்பு நடனத்தை மாணவிகள் வழங்கினர். வரவேற்பு உரையை கல்லூரி முதல்வர் சகோதரி மார்கரெட் பாஸ்டின் வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். நன்றியுரையை கல்லூரியின் செயலர் சகோதரி சூசை மேரி வழங்கினர். பின்னர் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments