தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிமுறைகள்..!!!

 

  -MMH

   தீபாவளி பண்டிகை திருநாள் என்பது அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உறவுகளுடன் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு குடும்பத்துடன் கோலாகலமாக தீபங்கள் ஏற்றியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை. இப்பண்டிகையின் முக்கிய விசேஷம் மக்கள் புத்தாடை அணிந்து தீபமேற்றி, பட்டாசுகள் வெடிப்பது ஆகும். தற்போது இருக்கும் வெப்பநிலை, காற்று மாசு இன்னும் பல்வேறு சமுதாய நலன்களை  கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிப்பதற்கு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை உச்ச நீதிமன்றத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு முழுமையாக தடை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் 31.07.2021 வெளியிட்ட இடைக்கால தீர்ப்பு  ஆணையில் ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்சனிக், காரியம் போன்ற திரவியங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதைத் தவிர்த்து பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரவெடிகள் வெடிக்கக் கூடாது என்றும் PESO வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், அமைதி பகுதிகள் என வரையறுக்கப்பட்டுள்ள நர்சிங் ஹோம், ஆஸ்பத்திரிகள், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மேலும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரையே பட்டாசுகள் வெடிக்கும் நேரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுமட்டுமன்றி அரசால் உரிமம் வழங்கப்பட்ட விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்ய வேண்டும், பட்டாசு விற்பனை கூடங்களில் விபத்துக்களை தவிர்க்க பாதுகாப்பு சாதனங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தால் தீவிரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . பொதுமக்களின் நலன் கருதியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்  இச்செய்தி வெளியிடப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஈசா, சாதிக் அலி.

Comments