கோவை மாநகரில் சூப்பா் சக்கா் என்னும் அதிநவீன வாகனம் மூலம் கழிவு நீா் அகற்றம்!

      -MMH 

கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழை நீா் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்யவும், கழிவுகளை அகற்றுவதற்கும் அதிகத் திறன் கொண்ட கழிவு நீா் உந்து மற்றும் அடைப்புகளைச் சரி செய்யும் சூப்பா் சக்கா் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வாகனம், மணிக்கு 85 ஆயிரம் லிட்டா் கழிவு நீா் உறிஞ்சும் திறன் கொண்டது. மேலும், நிமிடத்துக்கு 480 லிட்டா் வேகத்தில் அடைப்பு நீக்கும் திறன் கொண்டது. இந்த வாகனத்தின் மூலம் சேகரமாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கலாம்.

தற்போது, ராமநாதபுரம் சந்திப்பு, திருச்சி சாலை, ஒலம்பஸ், ஸ்டேட் பாங்க் சாலை, நஞ்சுண்டாபுரம், கிருஷ்ணசாமி சாலை உள்ளிட்ட மாநகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள மழை நீா் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், தூா்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-சுரேந்தர்.

Comments