சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிச்சென்ற இரண்டு லாரிகள் சிறைபிடிப்பு!

 

-MMH

    ஆலாந்துறை வெள்ளிமலைப்பட்டிணம், ஆட்டுக்காரன் கோவில் அருகே, அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிச்சென்ற இரண்டு லாரிகளை பொதுமக்கள் நேற்று சிறைபிடித்தனர். இதுகுறித்து, வருவாய்த்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், வி. ஏ. ஓ. , கங்கேஸ்வரன் ஆகியோர், விசாரணை நடத்தினர். அனுமதியின்றி மண் எடுத்தது தெரியவந்தது. இரு லாரிகளும் ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அனுமதியின்றி மண் எடுத்த சபரி கணேஷ், மஞ்சுநாதன் ஆகியோர் மீதும் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதே பகுதியில், சட்டவிரோதமாக மண் எடுத்ததாக, கடந்த மாதம், இரு லாரிகள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர் மண் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கனிம வள கொள்ளையை தடுக்க முடியும்!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments