பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் எஸ்டேட் நிர்வாகங்கள்! கண்டு கொள்வார்களா துறை அதிகாரிகள்?

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் அதிக அளவில் எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு வேலைக்காக அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் அதற்கென பிரத்யேகமாக உள்ள வாகனங்களில் அழைத்துவர படாமல் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களில் ஏற்றுச் செல்கிறார்கள். 

இவ்வாறு செல்லும்போது வாகனங்கள் ஏதாவது விபத்தில் சிக்கினால் அதிகளவு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர் .எனவே இதற்கான தக்க நடவடிக்கை எடுத்து இது போன்ற வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்துச் செல்லாமல் அதற்கென பிரத்யேகமாக உள்ள வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் வேண்டுகோளாக உள்ளது. 

இதனை அப்பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-திவ்யா குமார் (வால்பாறை)

S.ராஜேந்திரன்.

Comments