தும்பைப்பட்டியில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்புவிழா!

 -MMH

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் காலனியில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்புவிழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்துவைத்தார். துணைத்தலைவர் புனிதா, வார்டு உறுப்பினர்கள் மாணிக்கம் மற்றும் ரம்ஜான்,  ஊராட்சி மேற்பார்வையாளர் முத்தையா, ஊராட்சிச்செயலர் பாண்டிச்செல்வம், சமூக ஆர்வலர் தேவராஜ், திமுக அவைத்தலைவர் K.R.செல்லம், திமுக ஊராட்சிச் செயலாளர் தங்கையா, திமுக முத்துகுமார், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ராஜேஸ்வரன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கருப்பன்செட்டி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

- மதுரை வெண்புலி.

Comments