குனியமுத்தூரில் கஞ்சா வியாபாரி கைது!!

 

  -MMH

  கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மைல்கல் ஜங்சனில் சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுகுணாபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த நந்தகுமார்(23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ. 550 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது!!

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments