சேரன் மாநகரில் இளம்பெண் மாயம்!! காவல் நிலையத்தில் தாய் புகார்!!

    -MMH 

கோவை மாவட்டம் சேரன்மாநகர் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை. சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஹாசிம் பனு இவரது மகள் ஜாஸ்மின் ஒரு ஸ்டேஷனரி கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.


ஜாஸ்மின் வேலை நேரம் முடிந்து வெகுநேரமாகியும் ஜாஸ்மின் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் குடும்பத்துடன் சேர்ந்து ஜாஸ்மினை பல இடத்தில் தேடி இருக்கிறார். ஆனால் ஜாஸ்மினை கண்டுபிடிக்க முடியவில்லை இந்நிலையில் தன் மகள் காணாமல் போனதை பற்றி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன ஜாஸ்மினை பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சேரன் மாநகர் பகுதியில் கலக்கத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-முகமது சாதிக் அலி.

Comments