கோவை மதுக்கரை அருகே வீடு புகுந்து திருட்டு!!

    -MMH 

   கோவை மதுக்கரை அருகே உள்ள ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் நசுருதீன் இவர் இரு தினங்களுக்கு முன்பு தனது பாட்டியின் மூன்றாம் நாள் சடங்கிற்காக கேரளா சென்றார். பின் வீடு திரும்பிய இவர் தன் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த இவர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மொபைல் போன்கள் டிவி போன்றவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருட்டுச் சம்பவம் குறித்து நசுருதீன் மதுக்கரை போலீசாருக்கு புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர் .

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments