நகர பகுதிற்குள் வராமல் மேம்பாலம் வழியாக கோவை செல்ல முயன்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடிப்பு!!

   -MMH 

  கோவை: கிணத்துக்கடவு சரவீஸ் ரோடு வழியாக வராமல் நகர பகுதிற்குள் வராமல் மேம்பாலம் வழியாக கோவை செல்ல முயன்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

நேற்று மதியம் இரண்டு மணியளவில் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் மூன்று பெண்கள் கிணத்துக்கடவு செல்ல எறியுள்ளனர்.

தனியார் பேருந்து நடத்துனர் பேருந்து கிணத்துக்கடவு நகர பகுதிக்குள் செல்லாது என்று கூறி பேருந்தில் இருந்து மூன்று பெண்களையும் கீழே இறக்கி விட்டு பேருந்து கோவை நோக்கி கிளம்பியுள்ளது. உடனே பெண்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து தகவல் கூறியுள்ளனர்.

தனியார் பேருந்து கல்லாங்காட்டுபுதூர் பெட்ரோல் பங்க் அருகே மேம்பாலம் வழியாக செல்ல முயன்ற போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பேருந்தை மறித்து சிறை பிடித்தனர்.

பெண்களை பேருந்திலிருந்து இறக்கி விட்டு மேம்பாலம் வழியாக செல்ல முயன்ற தனியார் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய ஓட்டுநர் பேருந்தை சுமார் 200 மீட்டர் பின்னால் இயக்கி சரவீஸ் ரோடு வழியாக கிணத்துக்கடவு நகர பகுதிற்குள் இயக்கினர். பேருந்தின் முன் ஆட்டோ செல்வதும் பேருந்து பின்னோக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-சுரேந்தர்.

Comments