மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்!!!!

 -MMH

கோவை கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் ரூபேைஷ, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், ரூபேஷ், 47, மனைவி ஷைனி, 44, அனுாப், 35, கண்ணன், 48, வீரமணி, 62, ஆகியோர், 2015, மே மாதம், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ரூபேஷ், அனுாப், கண்ணன் தவிர மற்ற இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ரூபேஷ் தாக்கல் செய்த மனு மீது, ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நிலையில் உள்ளது.

அரசு தரப்பு வக்கீல் வாதம் ஏற்கனவே முடிந்த நிலையில், ரூபேஷ் தரப்பு வாதத்துக்காக, விசாரணை நவ. , 24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது, கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரூபேசை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப்,கோவை.

Comments