பொள்ளாச்சி அருகே ரயில் மோதியதில் டிரைவர் பலி விபத்தா தற்கொலையா போலீசார் விசாரணை!!

   -MMH 

   பொள்ளாச்சி ஆனைமலை மீனாட்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன்  அருகே ரயில் தண்டவாளத்தில் ஒருவர் ரயிலில் அடிபட்டு  சடலமாக கிடப்பதாக தகவல் காட்டுத் தீ போல் வேகமாக  பரவியது. 

இறந்தவர் யார்  என்ற விசாரணையில் திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செந்தில் வயது 46 என்பது தெரியவந்தது.

இதை அறிந்த அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், உறவினர்களும் மிகுந்த சோகத்தில் இருக்கும் நிலையில் விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலை கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில்

"செந்தில் ஒரு மது பிரியர் நேற்று இரவு வெகுநேரமாகியும் மது அருந்தாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மதுக்கடை சாத்திய பிறகும் பிளாக்கில் மது வாங்கி அருந்திவிட்டு ரயில் பாதையை கடக்கும் பொழுது நிலைதடுமாறி ரயில் பாதையில் விழுந்து கிடந்த சமயத்தில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு  இறந்ததாக கூறுகின்றனர்.

எது எப்படியோ செந்தில் மது அருந்திவிட்டு நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து ரயில் மோதி இறந்து இருந்தாலும் சரி இல்லை சராசரி மனிதனாக ரயில் பாதையை கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக இறந்து இறந்தாலும் சரி அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்."

-M.சுரேஷ்குமார்.

Comments