பொள்ளாச்சியில் மருத்துவர் கீர்த்திவாசன் நினைவேந்தல் நிகழ்வு! மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பு!

-MMH

      ஏழை மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கக் கூடிய நீட் தேர்வால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு முத்தூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்ற மருத்துவ மாணவர் நீட் நுழைவுத்தேர்வு எழுதி முடிவுகள் வெளிவராத நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம் சார்பில் பொள்ளாச்சியில் மருத்துவர் கீர்த்திவாசன் இன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா,  அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன், காதர் இப்ராஹிம், நகரத் துணைச் செயலாளர் அன்சர், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க தலைவர் அஷ்ரப் அலி, வணிகர் சங்க செயலாளர் அபூபக்கர் சித்திக், துணைச் செயலாளர்  முகமது ரபிக், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


-M.சுரேஷ்குமார்.


Comments