கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தற்கொலை முயற்சி!!

    -MMH 

   கோவை சூலூர் சுல்தான்பேட்டை அடுத்த நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விசைத்தறி தொழிலாளியான இவர் தொழில் தொடங்குவதற்காக தன் வீட்டு பத்திரத்தை பிணையமாக வைத்து வங்கியில், 20 லட்சம் கடன் பெற்றிருந்தார். அதில் 8 லட்சத்தை செலுத்திய அவர் பிணையமாக வைத்திருந்த வீட்டு பத்திரத்தை கேட்டுள்ளார். கடனை முழுமையாக அடைத்தால் தான் பத்திரம் வழங்க முடியும் என, வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. 

இதனால் மூன்று நாட்களுக்கு முன் செந்தில் குமாருக்கு ஆதரவாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு, பல்லடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சுல்தான்பேட்டைபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments