இன்று கோயம்புத்துார் தினம்!!

   -MMH 

    கோவை சந்திப்புக்கு இன்று 82 வயது. ஆம். இன்று தான் (நவ. , 24) கோயமுத்தூர் தினமாக  கொண்டாடப்படுகிறது!!

கோயம்புத்துார் தினம். எப்படி இந்த தினத்தை கோயம்புத்துார் தினமாக தேர்வு செய்தார்கள் என்று பார்த்தால், கோவை ரயில்வே ஸ்டேஷனின் பிரதான வாயில் மாற்றப்பட்ட நாளைத்தான், கோயம்புத்துார் தினமாகக் கொண்டாடுவதாகச் சொல்கிறார், கோவையின் வரலாற்று ஆய்வாளர் கோவிந்தராஜூலு.

கோவை ஒரு நகரம் என்ற அந்தஸ்தைப் பெற்றதன் முதல் நாள் இதுதான். அதற்கு முன்பே, கோவை ரயில் நிலையம் செயல்பட்டிருக்கிறது. இப்போதுள்ள கூட்ஷெட் ரோட்டில்தான்,

ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதி இருந்துள்ளது. அதன்பின் 1939ம் ஆண்டு நவ. , 24 அன்றுதான், கோவை ரயில் நிலையத்தை சந்திப்பாக மாற்றி, தற்போதுள்ள இடத்தில் பிரதான நுழைவாயிலைத் திறந்திருக்கிறார்கள்.

இந்த 82 ஆண்டுகளில், கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பல மடங்கு முன்னேறியுள்ளது. ஆனால் கோவை ரயில் சந்திப்பு, இன்னும் போதிய அடிப்படை வசதிகளின்றி ஒரு மூன்றாம் நிலை நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கான கட்டமைப்பு வசதிகளுடனும் தோற்றத்திலும்தான் உள்ளது.

கோயம்புத்துார் தினம் வரும்போதெல்லாம் இந்த கொண்டாட்டத்துடன் வருத்தமும் கூடவே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments