சிங்கம்புணரி அருகே தீயணைப்புத்துறையினர் நடத்திய பேரிடர் மேலாண்மை ஒத்திகை!

 

-MMH

       தீவிரமான வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சிங்கம்புணரி காவல் நிலையம் மற்றும் சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் சார்பாக மேலப்பட்டி பாலாற்றுப் பாலத்தில் இன்று பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்தப்பட்டது.

ஒத்திகையில், மழை - வெள்ளக் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, பேரிடர்களில் தப்பிப்பது எப்படி?, மனித உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது எப்படி?, விலங்கினங்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி செயல்முறை விளக்கமாக என்று பொதுமக்களுக்கு செய்து காட்டப்பட்டது.

மரக்கட்டைகள் மூலம் மனிதர்களை காப்பாற்றுவது, கயிறு கட்டி இழுப்பது, லைப் ஜாக்கெட் அணிவது போன்றவற்றிற்கான செயல் விளக்கம், தனி நபர்கள் முதலுதவி செய்வதற்கான பயிற்சிகள் பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிங்கம்புணரி தீயணைப்புத்துறை நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு குழுவினர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் குகன் மற்றும் மருது, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் எழில்மாறன், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரிடர் மேலாண்மை ஒத்திகை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

-அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments