மழை வெள்ள மீட்பு பணிகள் குறித்து புகார் தெரிவிக்க கோவை மக்களுக்கு அவசர எண்கள் !!

 

-MMH

      தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக  கனமழை இடைவிடாமல்  பெய்து வருகிறது. மேலும்  இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால்  மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் மழை வெள்ள மீட்பு பணிகள் மேற்கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அவசரத் தேவைகளுக்கு தொடர்புகொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி தலைமை அலுவலகம் - 0422 2302323, வாட்ஸ்அப் - 8190000200, மத்திய மண்டலம் - 0422 2215618, கிழக்கு மண்டலம் - 0422 2595950, மேற்கு மண்டலம் - 0422 2551800, வடக்கு மண்டலம் - 0422 2243133, தெற்கு மண்டலம் - 0422 2252705 ஆகிய எண்களில் மழை வெள்ள மீட்பு பணிகள் குறித்த  அவசர தேவைகளுக்கு  பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

-M.சுரேஷ்குமார்.


Comments