சிங்கம்புணரி அருகே சுற்றுலாத்தலமாக மாறி வரும் கண்மாய்கள்! அருவி போல கொட்டும் தண்ணீரில் மக்கள் குதூகலம்!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சில கண்மாய்களில் நீர் முழுவதும் நிரம்பியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூரில் உள்ள கண்மாய் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி தண்ணீர் மறுகால் வழியாக வெளியேறிச் செல்கிறது. மேலயான்பட்டி கிராமத்தில் ஏரி கண்மாயின் மறுகால் வெளியேறும் கழுங்கு பகுதியில் மக்கள் கூட்டமாக வந்து குளித்து, செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

கண்மாயின் மறுகால் வழியே அருவி போல் தண்ணீர் வெளியேறும் காட்சியைக் காண மேலயான்பட்டி கிராமத்திற்கு பொதுமக்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். கண்மாயில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். கூட்டமாக பொதுமக்கள் இங்கு வருவதால் திடீர் கடைகளும்  முளைத்துள்ளன. 

அதேபோல சிங்கம்புணரிக்கு வெகு அருகிலிருக்கும் நாட்டார்மங்கலம் மற்றும் கண்டுகப்பட்டியில் உள்ள கண்மாய்களும் நிரம்பி வழிகின்றன. அங்கும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments