பள்ளி,கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுக்க CCTV கேமரா அமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி கலெக்டரிடம் மனு!!

   -MMH 

  நெல்லை தமுமுக மமக மாவட்ட துணைத் தலைவர் AM மைதின் பாதுஷா தலைமையில் திரன்டு வந்த மமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,"சமீப காலங்களாக பள்ளி,கல்லூரிகளில் மாணவியர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதும் அதனால் தற்கொலை சாவுகளும் ஏற்ப்படுவதால், அதனை தடுக்கும் பொருட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகளின் அனைத்து வகுப்பறைகளிலும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்கானிக்க வேண்டும்.

மாணவியரின் குட்டை பாவாடைகள் தடை செய்யப்பட வேண்டும். அனைத்து பள்ளிக்கூடம்,கல்லூரிகளில் தொந்தரவுக்குள்ளாக்கப்படும் மாணவியர்கள் அதிகாரிகளை விரைவில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரின் தொடர்பு எண்கள் வைக்கப்பட வேண்டும்" போன்ற கோரிக்கைகள் அதில் கூறப்பட்டிருந்தது.

அவருடன் மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் அ.காஜா,ஊடக அணி செயலாளர் செய்யது,IPP துணை செயலாளர் ரபீக்,மேலப்பாளையம் வடக்கு பகுதி தமுமுக மமக தலைவர் குதா,பகுதி செயலாளர் அஜீஸ்,38- வது வார்டு நிர்வாகி ராஹத் செய்யதலி ஆகியோர் இருந்தனர்.

-ருசி மைதீன், தஞ்சாவூர்.

Comments