புல்லுகாடு பகுதி பழமார்க்கெட்டில் SDPI சாலை மறியல்!

   -MMH 

   கோவை தெற்கு உக்கடத்தில் பொன்விழா நகர், ரமலான் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வசதியாக புல்லுக்காடு சாலை உள்ளது. அதில் தற்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளதால் சாலைகள் சேதமடைந்தன.

ஆனால் அந்த சாலை சீரமைக்கப் பட வில்லை. மேலும் அங்குள்ள கழிவுநீர் பண்ணை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார பாதிப்பு உள்ளது.

எனவே மழை வெள்ள பாதிப்பு, சுகாதார சீர்கேடு ஆகியவற்றை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் நேற்று புல்லுக்காடு பழ மார்க்கெட் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். அப்துல் காதர், முகமது இஷாக், இக்பால், மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments