ஓமிக்ரான் எதிரொலி..!!! கோவைக்கு விமானத்தில் வந்த 17 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு... கோவையில் தீவிரமாகிறது உஷார் நிலை..!!
கோவையில் விமானத்தில் வந்த 17 பேர் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி காரணமாக தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிகிரான் வைரஸ் கடந்த மாதம் 24 ஆம் தேதி தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டு மேலும் இது ஐரோப்பா, இட்டாலி போன்ற நாடுகளுக்கும் பரவி இந்நாடுகள் ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது கோவைக்கு இந் நாடுகளில் இருந்து 17 பேர் வந்துள்ளதாகவும் அதாவது கடந்த 24ஆம் தேதிக்கு முன்பு இந்த வைரஸ் அறியப்படுவதற்கு முன்பே வந்துள்ளதாக பெரிய வந்த நிலையில் இவர்களைப் பரிசோதித்ததில் இவர்களில் யாருக்கும் தோற்று இல்லை என்பது அறியப்பட்டது இருப்பினும் இவர்கள் 17 பேரும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் கோவையைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பந்தய சாலையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு இந்த தொற்று கண்டறிந்த நிலையில் கோவையில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து வரும் நிலையில் இந்த புதுவகை வைரஸ் உலகத்தை அச்சுறுத்தி வருவது பெரும் கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-முகமது சாதிக் அலி.
Comments