18 வயதுடைய பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி குற்றமாம்...! அப்படி என்றால் பெண்ணின் திருமண வயது...?

   -MMH 

    கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில்  தற்போது பெண்களின்  திருமண வயதை 18 லிருந்து  21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதன்படி இனி பெண்களுக்கு 21 வயது முடியும் முன்பு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி குற்றம் ஆக்கப்படும். பெண்களுக்கு சிறுவயதிலே திருமணம் செய்து விடுவதால் பெண்கள் தாய்மை அடைந்து பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் விகிதம் உயர்ந்த படியே இருந்ததால் பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக துணை தலைமை நிருபர், 

-M.சுரேஷ்குமார்.

Comments