பாலாற்றில் குடிநீர் குழாய் உடைப்பு!! - குடிநீர் தட்டுப்பாடு!!

   -MMH 

      காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டது. 1 மாத காலமாக வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை. 

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பாலாற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம் கிருஷ்ணகிரி வழியாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு வரக்கூடிய இந்த காவிரி கூட்டுக் குடிநீர் பாலாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மாதனூரில் இருந்து வேலூர் மாவட்டம் ஓச்சேரி வரை செல்லக்கூடிய இந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் தற்போது வேலூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. தற்போது படிப்படியாக பாலாற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால் அதை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

-ரமேஷ், வேலூர்.

Comments