கோவையில் முதல் முறையாக மொபைல் பங்க்...!!

   -MMH 

   கோவை சின்னவேடம்பட்டியில் ஆத்மிகா ஹாஸ்பிடல் சார்பாக மொபைல் பங்க் அறிமுக விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த வாகனத்தை லயன்ஸ் கிளப் கவர்னர் மோகன்குமார் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இதன் முதல் விற்பனையை எம் எம் டி எஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டே ரியன் மயில்சாமி தொடங்கிவைத்தார்.  'fuel to door' என்ற இந்த டீசல் வாகனம் ரெடிமிக்ஸ் கான்கிரீட் , பள்ளி, கல்லூரிகள், கனரக வாகனங்கள் போன்றவற்றுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைந்தது 500 லிட்டர் டீசல் முதல் நிரப்பி தரப்படும். அதிகமாக டீசல் வாங்குபவருக்கு சலுகை விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் ஹாஸ்பிடல்டி நிர்வாக தலைவர் விவேக், ரமேஷ் , சவிதா விவேக், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-சாதிக் அலி.


Comments