சிங்கம்புணரியில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மதுரை மாவட்டம், கீழநாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சுசீலா (75). இவர் தனது மகன் உதயகுமாருடன் பல் மருத்துவம் பார்ப்பதற்காக சிங்கம்புணரிக்கு வந்திருக்கிறார். மருத்துவம் பார்த்துவிட்டு அன்று மாலை 6.30 மணியளவில் சிங்கம்புணரியிலிருந்து கீழநாட்டார்மங்கலத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி இருக்கின்றனர். நாட்டார்மங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தாதங்குளம் அருகே அவர்களுக்கு பின்புறமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் சுசீலாவின் கழுத்தில் கிடந்த 36 கிராம் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சுசீலாவின் மகன் உதயகுமார், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- அப்துல்சலாம்.

Comments