செல்போனால் மகனை இழந்த பெற்றோர்..!! எமனின் பாசக்கயிறு ஆக மாறும் செல்போன் போதை..!!!

   -MMH 

   சிறுமுகை அருகே திருவள்ளுவர் நகரில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

மேட்டுப்பாளையம் சிறுமுகை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி , ரங்கராஜ் தம்பதியினர் இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் நிகேஷ் என்ற மகன் உள்ளார். அண்மையில் ரங்கராஜ் தனது மகனுக்கு செல்போன் ஒன்று வாங்கி தந்துள்ளார். செல்போன் கிடைத்த நாளில் இருந்தே முக்கேஷ் தொடர்ச்சியாக செல்போனில் ஆன்லைனில் கேம் விளையாடி உள்ளார். இதனால் நிகேஷ் இன் தந்தை ரங்கராஜ் செல்போன் கேம் விளையாடுவதற்காக மட்டுமல்ல என்று கண்டித்து செல்போனையும் வாங்கி வைத்துள்ளார். இதனால் நிகேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன்களில் நாள் பல விபரீதங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் இதுபோன்ற துயரச் சம்பவம் அனைவரும் மனதை உருக்குவதாக உள்ளது . இந்த ஆன்லைன் கேம் என்னும் மாய போதையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பலரும் கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளனர்.

-முகமது சாதிக் அலி.

Comments