நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்!

   -MMH 

    10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 தமிழர் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி காரைக்குடியில் சிறைவாசிகள் விடுதலை கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். 

தமிழர் விடியல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பெரியார் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் AITUC மாநில உதவி செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணகி, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் பெரியார் முத்து, பச்சைத் தமிழகம் தமிழ் கார்த்தி, பழனி பாபா பேரவை மாநிலச் செயலாளர் நவுசாத் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் சித்திக், பிறர் நலம் இப்னு மீரா, தமிழ் தேச மக்கள் கட்சியின் இளையவன், ரபிக் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்வதன் அவசியத்தையும், அதற்கான சட்ட ரீதியான விளக்கங்களையும் அனைவரும் எடுத்துரைத்தனர். நீண்ட கால சிறைவாசிகளை விடுவிக்கக் கோருவது அவர்களுக்கான சலுகை அல்ல என்றும், சட்டம் அவர்களுக்கு அளித்துள்ள உரிமை என்றும் பேசப்பட்டது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நகரச் செயலாளர் பசீர் நன்றி உரை ஆற்றினார்.

- பாரூக், சிவகங்கை.

Comments