டாப்சிலிப்ல் ஹியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரவ் வுட் நினைவு தினம் அனுசரிப்பு! இயற்கையின் மீது கொண்ட பேரன்பு! !

      -MMH 

    ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியில் கடந்த 1916-1917-ம் ஆண்டுகளில் வன அதிகாரியாக பணிபுரிந்தவர் ஹியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரவ் வுட். இவர் பணிபுரிந்த காலங்களில் டாப்சிலிப் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால், வனப்பகுதியில் பல ஏக்கரில் தேக்கு மரங்கள் உருவாகியது. டாப்சிலிப் வனத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தான் இறந்த பின் டாப்சிலிப் வனப்பகுதியில்தான் தங்கி இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் பங்களா அருகில் அடக்கம் செய்யுமாறு உயில் எழுதி உள்ளார். இதற்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்தது.  கடந்த 1933-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி அவர் இறந்தார். இதனையடுத்து, பிரிட்டிஷ் அரசு ஹியூகோவுட் குறிப்பிட்டு இருந்த பகுதியில் இடம் ஒதுக்கி அடக்கம் செய்து கல்லறை கட்டியது. இந்தநிலையில், ஹியூகோவுட் நினைவு தினம் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்,

திவ்யகுமார் வால்பாறை .

Comments