பெட்டிக்கடை உரிமையாளர் கைது!!

 -MMH 

பொது இடங்களில் மது அருந்த அனுமதி கிடையாது. அதற்கென தனியாக பார் வசதிகளை அரசு செய்துள்ளது. இந்த நிலையில் பெட்டிக் கடையில் மது அருந்த அனுமதி அளித்த பெட்டி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஆலாந்துறை, வடிவேலம்பாளையம், பட்டக்காரர் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் - 56. இவர், ஆலாந்துறை மெயின் ரோட்டில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.

அவ்வழியாக, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பலரும் பெட்டிக்கடையில்  மது அருந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அனுமதியின்றி அரசு மதுபானத்தை கடையில் வைத்து அருந்த அனுமதித்ததாக, ராமச்சந்திரன் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments