சாதனை படைத்த குழந்தைகளுக்கு பாராட்டு விழா கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது!!
கோவை: லிட்டில் இன்டிகோ கிட்ஸ் அகாடமியில் பயின்று பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கி நடத்தப்பட்ட பாராட்டு விழா கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இன்டிகோ கிட்ஸ் அகாடமியில் பயின்று வந்த 15 குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதன் வாயிலாக ஆசிய அளவிலும் தேசிய அளவிலும் மற்றும் தமிழக அளவிலும் சாதனை படைத்து கோவை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 2 வயதிலிருந்து 8 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளனர். இவர்களை கவுரவித்து பரிசளித்து பாராட்டும் வகையிலான நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குழந்தைகள் இடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் எப்போதும் தேனீக்களை போல சுறுசுறுப்பையும், அவர்கள் அடைய வேண்டிய இலக்கையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து தங்களது திறமைகளை அறுவடை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து சாதனை செய்த குழந்தைகளுக்கு அவர் பரிசளித்து பாராட்டினார். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லிட்டில் இன்டிகோ அகாடமியின் நிர்வாக இயக்குநர் சுபாசினி, இணை நிர்வாக இயக்குநர் முத்துக்குமார், ஆசியன் ரெக்கார்ட் அகாடமி செந்தில் குமார், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் தீர்ப்பாளர் சத்யஸ்ரீ குப்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments