சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடிவாளம் போட்ட போத்தனூர் போக்குவரத்து காவல்துறையினர்! குவியும் மக்கள் பாராட்டு!

  

-MMH

      கோவை மாவட்டம் போத்தனூர் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லவும் புதிதாக ரயில் கல்யாண மண்டபம் அருகில் இருந்து செட்டிபாளையம் ரோட்டில் வெள்ளலூர் பிரிவு அருகே  வரை புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. போத்தனூர் மற்றும் சுந்தரா படத்தில் இருந்து வரும் வாகனங்கள் செட்டிபாளையம் செல்லவும் வெள்ளலூர் செல்லவும் இந்த மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் போத்தனூரிலிருந்து சுந்தராபுரம் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திற்கு பக்கத்தில் உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்தி சுற்றி வந்து சுந்தராபுரம் செல்ல வேண்டும் இதுதான் போக்குவரத்து விதி ஆனால் சுந்தராபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் இந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்தாமல் மேம்பாலத்திற்கு முன்புறமுள்ள தடுப்பு சுவரை கடந்தவுடன் இடது புறம் திரும்பி சுந்தராபுரம் செல்லும் சாலைக்கு செல்கின்றனர் இதுபோன்று திரும்பிச் செல்லும்போது சுந்தரா புரத்தில் இருந்து செட்டி பாளையம் மற்றும் வெள்ளூர் செல்ல வேண்டிய வாகனங்கள் வரும்பொழுது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் போத்தனூர் இருந்து வரும் வாகனங்கள் சாலை விதிகளை மீறி சட்டென திரும்புவதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வாகன விபத்து நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே இது குறித்து நாளைய வரலாறு புலனாய்வு ஆன்லைன் நியூஸில் செய்தி வெளியிட்டு இருந்தோம். போக்குவரத்து காவலர்களும் அவ்வப்போது அந்தப் பகுதியில் நின்று சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு  சாலை விதிகளை எடுத்துக்கூறியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறி தகுந்த அபராதங்களை  விதித்து கொண்டுதான் இருந்தனர்  தற்போது போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் இருக்க  துணை ஆய்வாளர்  தலைமையில் போக்குவரத்து காவலர்கள் அதற்கென உள்ள பிரத்யேக தடுப்புகளை வைத்து வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும்படி செய்துள்ளனர்.

எனவே இனிமேல் போத்தனூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சர்வீஸ் சாலையை பயன்படுத்தித்தான் சுந்தராபுரம் செல்லவேண்டிய நிலைமை ஏற்படும் மேலும் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளும் நடக்காது என்று அந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-சி.ராஜேந்திரன்.

Comments