கோவையில் கல்லூரி மாணவர்களுடன் 'வேலன்' படக்குழுவினர் சந்திப்பு!!

 -MMH 

ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்து, இயக்குனர் கவின்  இயக்கியுள்ள வேலன் திரைப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் நாயகன் முகேன் ராவ், நாயகி மீனாட்சி கோவிந்தராஜன்,மற்றும் இயக்குனர் கவின் மற்றும் படத்தில் நடிகர்கள் ஆகியோர் கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளை சந்தித்து பேசினர்.முன்னதாக  செய்தியாளர்களிடம் வேலன் படத்தின் இயக்குனர் கவின் கதை நாயகன், முகேன் ராவ், நாயகி மீனாட்சி கோவிந்தராஜன்,ஆகியோர் கூட்டாக பேசினர்.அப்போது, தன்னுடைய கேரியரில் வேலன் திரைப்படம்  முக்கியமான திரைப்படம் எனவும், கிராமத்து கதை களத்தில் அமைந்துள்ள இப்படத்திற்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரையரங்கிற்கு வந்து கண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்..தொடர்ந்து பேசிய இயக்குனர் கவின், பொள்ளாச்சி,பாலக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இப்படம் காட்சியாக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இதில்  இப்படத்தில் பிரபு, சூரி, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள. இந்தப் படம் வரும் 31ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடதக்கது..இறுதியாக வேலன் படக்குழுவினர் நீலாம்பூர் பகுதியில் உள்ள சக்தி தொழில்நுட்ப கல்லூரி மாணவ,மாணவிகளை சந்தித்து பேசினர்.

- சீனி,போத்தனூர்.

Comments