வேளாண் பல்கலைக் கழக தேர்வு முடிவுகளை எதிர்த்து மாணவ மாணவியர் போராட்டம்!!

 -MMH 

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அரியர் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்ததாக பல்கலை சார்பில், அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் 'ஆன்லைனில்' வீட்டிலிருந்து தேர்வு எழுதிய போது முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர்கள் தேர்வில் தோல்வி அடைந்திருப்பதாக பல்கலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு, எதிர்த்து தெரிவித்து நேற்று காலை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பல்கலை., நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, மாணவர்கள் பல்கலை நுழைவாயில் அருகே மருதமலை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கல்லுாரி பேராசிரியர்கள் அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதன் பின், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மாணவர்கள் தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments