சேரன் மாநகர் பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளை போலீசார் தீவிர கண்காணிப்பு!!

கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதிகளில் சமீப காலத்தில் அதிகமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கையாக சேரன் மாநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று இரவு சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகாமையில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டை போலீசார் கண்காணிப்பில் எடுத்து விசாரணை செய்தனர். இதுபோன்ற போலீசாரின் குற்ற தடுப்பு நடவடிக்கை செயல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

-சாதிக் அலி.

Comments