பெண்னுடன் பழக்கம் தட்டிகேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் !!

   -MMH 

   கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் ரித்திக் (22). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுஷா அசோக் (20), இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அது இறந்து விட்டது. அதன் பின்னர் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் முழு நேரமும் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் ரித்திக்கிற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். அப்போது அந்தப் பெண்களிடம் ரித்திக் தொழில் தொடங்க ரூபாய் 3 லட்சம் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பணத்தை அந்த பெண் ரித்திக் இடம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் அவரது மனைவி மஞ்சுஷா அசோக்குக்கு தெரியவந்ததும் உடனே அவர் தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது அவர் தனது மனைவியை மஞ்சுஷா அசோக்கை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சரமாரியாக தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனால் பயந்துபோன அவர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரித்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments